/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சகதியான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
சகதியான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சகதியான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
சகதியான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2025 01:47 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டியுள்ள, காமாட்சியம்மன் சன்னிதி தெரு வழியாக முனிசிபல் குடியிருப்பு, பவள வண்ணர் தெரு, வடக்கு கிருஷ்ணன் தெரு, தெற்கு கிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிப்போர் சென்று வருகின்றனர்.
மேலும், பல்வேறு பகுதியில் இருந்து பழைய ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரும் இத்தெரு வழியாக சென்றுவருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள்நடமாட்டமும் மிகுந்த இச்சாலை கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையின்போது மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து, சகதி சாலையாக மாறியுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பழைய ரயில் நிலையம் அருகில் சேதமடைந்த சாலையை பேட்ச் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.