/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்வாங்கியதால் சாலையில் பள்ளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ADDED : டிச 30, 2025 06:08 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திரு வேகம்பன் சாலை உள்வாங்கியதால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 11வது வார்டு, பிள்ளையார்பாளையம், திருவேகம்பன் சாலை வழியாக, கீழ்கதிர்பூர், சாலபோகம், புத்தேரி, விப்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு பலர் சென்று வரு கின்றனர்.
வாகன போக்கு வரத்து நிறைந்த இச்சாலையில், செல்வ விநாயகர் கோவில் அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால், வெளியேறிய குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியுள்ளதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாத சாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
பள்ளம் ஏற்பட்ட பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விழும் நிலை உள்ளது.
எனவே, பிள்ளையார்பாளையம் திருவேகம்பன் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.