/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : டிச 30, 2025 06:07 AM

கா ஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், நெடுஞ் சாலைத் துறை சார்பில், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மாட வீதி சந்திப்பில், வடிகால்வாயின் கான்கிரீட் தளம் உடைந்து, கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.
இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள், சாலை வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் கான்கிரீட் தளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.வெங்கட்ராமன், காஞ்சிபுரம்.