/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் பணிக்கு தோண்டிய சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ADDED : டிச 22, 2024 12:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பிராமணர் தெரு, நான்கு முனை சந்திப்பில், கடந்த 20 நாட்களுக்கு முன் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்தும், சேதமான சாலையை பெயரளவிற்கு மண்ணால் மூடியுள்ளனர்.
சாலையை சமன் செய்து தார் ஊற்றி முறையாக சீரமைக்கவில்லை. இதனால், பள்ளம் இருந்த இடத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மண்ணில் புதைந்து சிக்கும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் சீரமைப்புக்காக சேதமான சாலையை சமன் செய்து, ‛பேட்ச் ஒர்க்' பணியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.