ADDED : அக் 16, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்கள், மண் சாலையாக உள்ளதால், மழைக்காலத்தில் சகதி சாலையாக மாறிவிடுகிறது.
இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும், சேற்றில் நிலை தடுமாறி வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தெருக்களுக்கு தார்ச்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.