/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை சொல்கிறார் செல்வபெருந்தகை
/
எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை சொல்கிறார் செல்வபெருந்தகை
எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை சொல்கிறார் செல்வபெருந்தகை
எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை சொல்கிறார் செல்வபெருந்தகை
ADDED : பிப் 16, 2025 02:37 AM

குன்றத்துார், 'குன்றத்துார் அருகே, மணிமங்கலம் கிராமத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டையில் நடந்தது.
காங்கிரஸ் தேசிய செயலர் சூரஜ் ஹெக்டே, ஸ்ரீபெரும்புதுார் எ.ம்.எல்.ஏ., மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
மணிமங்கலத்தில் நடந்த நிகழ்வில், செல்வபெருந்தகை பேசியதாவது:
சட்டசபையிலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி, காவல் துறையினர், இரும்பு கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும் என, நாங்கள் கேட்கிறோம்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்துகிறார். அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. இதை கடந்து செல்ல முடியாது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கும் உள்ளது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது.
மயிலாடுதுறை படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். காவல் துறையினர், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

