/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருக்கேரி ஏரிக்கரை பலப்படுத்தும் பணி
/
முருக்கேரி ஏரிக்கரை பலப்படுத்தும் பணி
ADDED : அக் 19, 2025 09:36 PM

உத்திரமேரூர்: முருக்கேரி ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், முருக்கேரி கிராமத்தில், ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான, 120 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழை நேரங்களில் ஏரியில் சேகரமாகும் தண்ணீரை கொண்டு, 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், முருக்கேரி ஏரி, சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல், நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்து இருந்தது.
இதனால், மழை நேரங்களில் தேவையான தண்ணீர் சேகரமாகாமல் உபரி நீர் வெளியேறி வந்தது. மேலும், கரைகளில் செடி கொடிகள் வளர்ந்து வருகின்றன. விவசாயிகள் ஏரியை துார்வாரி கரையை பலப்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, ஏரியை துார்வார ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால், 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலாவதாக ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
தற்போது, கரையின் இருபுறமும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மண் கொட்டி கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு வாரத்திற்குள் ஏரியை துார்வாரும் பணியும் முடிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.