/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்
/
அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்
ADDED : அக் 08, 2024 12:53 AM

காஞ்சிபுரம், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதி நிலம் அரசு நிலமாகும்.
தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தி வருகிறது. நேற்று, பரந்துார் ஊராட்சி, நாகப்பட்டு கிராமத்திற்கு நிலம் அளவீடு செய்ய வருவாய் துறையினர் சென்று உள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், எங்களுக்கு சொந்தமான நிலங்களை அளக்க விடமாட்டோம் என, வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், நாகப்பட்டு கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர். அதிகாரிகளும், வேறு ஒரு நாளில் அளந்து கொள்ளலாம் என, புறப்பட்டு சென்றனர்.