/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு
/
நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜன 01, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 11-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, உழவர் மோகன் தலைமையில், உத்திரமேரூர் ஒன்றியம், சீதாவரம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மலர் துாவி, மரியாதை செய்யப்பட்டது. மேலும், சிலம்பாட்டம் போட்டிகள் நடத்தி, உழவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், உழவர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.

