sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 தேசிய பல்கலை வாலிபால்: தமிழக அணி அதிரடி வெற்றி

/

 தேசிய பல்கலை வாலிபால்: தமிழக அணி அதிரடி வெற்றி

 தேசிய பல்கலை வாலிபால்: தமிழக அணி அதிரடி வெற்றி

 தேசிய பல்கலை வாலிபால்: தமிழக அணி அதிரடி வெற்றி


ADDED : டிச 23, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேசிய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டியில், தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., -வேல்ஸ், பாரதியார் பல்கலை அணிகள், தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவில், தேசிய பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் நடக்கிறது.

நேற்று காலை நடந்த 'நாக் - அவுட்' சுற்றில், பாரதியார் பல்கலை அணி, கொல்கட்டா பல்கலை அணியை, 25 - 17, 25 - 9, 25 - 11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, தங்கள் ஆதிக்கத்தை தெளிவாக காட்டியது.

அதேபோல், எஸ்.ஆர்.எம்., பல்கலை, கடும் போராட்டத்துக்குப் பின், சண்டிகர் பல்கலை அணியை, 26 - 24, 25 - 15, 25 - 20 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில், மேற்கு வங்கத்தின் ஆடம்ஸ் பல்கலை அணியை, 25 - 16, 25 - 20, 25 - 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, எஸ்.ஆர்.எம்., அணி தனது வெற்றிப் பயணத்தை உறுதி செய்தது.

மேலும், பி.கே.என்., பல்கலை அணியை, 25 - 10, 25 - 18, 25 - 7 என்ற செட் கணக்கில், எம்.ஜி., பல்கலை தோற்கடித்தது. வேல்ஸ் பல்கலை அணியும் சிறப்பாக விளையாடி, மகரிஷி தயானந்த் பல்கலை அணியை, 25 - 21, 25 - 12, 25 - 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

போட்டிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தமிழக பல்கலை அணிகள் தொடர் வெற்றிகளை பதிவுசெய்து வருகின்றன.






      Dinamalar
      Follow us