/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாட்டுக்கோழிகளுக்கு அஜீரணத்தை சரிசெய்ய இயற்கை வைத்தியம்
/
நாட்டுக்கோழிகளுக்கு அஜீரணத்தை சரிசெய்ய இயற்கை வைத்தியம்
நாட்டுக்கோழிகளுக்கு அஜீரணத்தை சரிசெய்ய இயற்கை வைத்தியம்
நாட்டுக்கோழிகளுக்கு அஜீரணத்தை சரிசெய்ய இயற்கை வைத்தியம்
ADDED : ஆக 06, 2025 02:09 AM

நா ட்டுக் கோழிகளுக்கு ஏற்படும் அஜீரணத்தை இயற்கை வைத்தியத்தில் சரி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.
இதில், நாட்டுக்கோழி பெரும் பங்கு வகி க்கிறது. மேய்ச்சலுக்கு செல்லும் நாட்டுக் கோழிகள், ஏதேனும் ஒவ்வாமை தீவனத்தை உண்டுவிட்டு, அஜீரணத்தால் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இதை, இயற்கை வைத்தியத்தில் சரி செய்யலாம்.
நிலவேம்பு, திப்பிலி, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், பொறித்த வெங்காயம் சம அளவு எடுத்து வேக வைக்க வேண்டும். அதை, தண்ணீர் விடாமல் அரைத்து, சிறிதளவாக மாத்திரைகள் போல உருட்டி, நி ழலில் உலர்த்த வேண்டும். நாட்டுக் கோழிகளுக்கு தினமும் ஒரு மாத்திரை வீதம் மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும்.
இதுதவிர, வெந்தயம், சுக்கு, பெருங்காயம், வாய்விடங்கம், திப்பிலி ஆகியவற்றை, தலா 2 கிராம் எடுத்து, இடித்து பொடி செய்ய வேண்டும். அதனுடன் முருங்கை இலைச்சாற்றில் கலந்து, சிறிய ரக மாத்திரைகளாக தயாரித்து, தினசரி ஒரு மாத்திரை வீதம் மூன்று நாட்களுக்கு கொடுத்து வந்தால், கோழிகளுக்கு ஏற்படும் அஜீரணத்தை சரி செய்யலாம். கோழி வளர்ப்பில், நல்ல வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -கே.பிரேமவல்லி, 97907 53594.