/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளேரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசை
/
வெள்ளேரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசை
ADDED : செப் 21, 2025 10:40 PM
வாலாஜாபாத்;வாலாஜாபாத், வெள்ளேரி அம்மன் கோவிலில் இந்தாண்டிற்கான நவராத்திரி விழா நேற்று துவங்கியது.
வாலாஜாபாத் வெள்ளேரி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் வெள்ளேரி அம்மனை கிராம தேவதையாக வழிபடுகின்றனர்.
இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா நடப்பது வழக்கம். அதன்படி, 112ம் ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி, காலையில் அபிஷேகம், ஆராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அடுத்தடுத்த நாட்களில் மாடவீதிகளில் உலா வருதல், ராஜவீதியில் கொளு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
அக்., 2ம் தேதி பார்வேட்டை உற்சவமும், 3ம் தேதி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற உள்ளது.