/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்தவெளி அம்மன் கோவிலில் நாளை நவராத்திரி விழா
/
சந்தவெளி அம்மன் கோவிலில் நாளை நவராத்திரி விழா
ADDED : அக் 01, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சந்த வெளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவ நவராத்திரி விழா நாளை துவங்கி, வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி இரவு 7:00 மணிக்கு மூலவர்அம்மன், பஞ்சமுக விநாயகர், கரகாட்ட நாயகி, அன்னபூரணி, லட்சுமி நரசிம்மர், பொட்டு அம்மன்,அங்காள பரமேஸ்வரி, கம்பாநதி காமாட்சி,தங்க சவசம், ஹரிஹரன், சரஸ்வதி மற்றும் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அக்., 15ம் தேதி, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.