/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நட்சத்திர ஹோட்டல் லிப்டில் சிக்கிய நேபாள கால்பந்து வீராங்கனையர்
/
நட்சத்திர ஹோட்டல் லிப்டில் சிக்கிய நேபாள கால்பந்து வீராங்கனையர்
நட்சத்திர ஹோட்டல் லிப்டில் சிக்கிய நேபாள கால்பந்து வீராங்கனையர்
நட்சத்திர ஹோட்டல் லிப்டில் சிக்கிய நேபாள கால்பந்து வீராங்கனையர்
ADDED : ஜன 28, 2024 12:01 AM

கோயம்பேடு, 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த கால்பந்து வீராங்கனையர், சென்னை நட்சத்திர ஹோட்டல் மின்துாக்கியில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அவர்களை பத்திரமாக மீட்டனர்.
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள், சென்னை பெரியமேடு நேரு உள் அரங்கத்தில் நடக்கின்றன.
இதில் பங்கேற்க, பல மாநிலங்களில் இருந்து வீரர் - வீராங்கனையர் வந்துள்ளனர். நகரின் முக்கிய ஹோட்டல்களில், அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதில், நேபாளத்தில் இருந்து வந்துள்ள கால்பந்து வீராங்கனையர் 20க்கும் மேற்பட்டோர், கோயம்பேடு சிம்சன் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
நேற்று, நேரு விளையாட்டு அரங்கிற்கு செல்ல, ஹோட்டல் மின் துாக்கியை பயன்படுத்தினர்.
ஐந்தாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்துக்கொண்டிருந்த போது, இரண்டாவது தளத்தில் மின்துாக்கி திடீரென நின்றது. வீராங்கனையர் அலறலை கேட்டு ஓடி வந்த ஹோட்டல்ஊழியர்கள், மின் துாக்கியை பழுது நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதேசமயம், அவர்களை மீட்கும் முயற்சியிலும் இறங்கினர்.
அவர்களால் முடியாததால், கோயம்பேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அடுத்த 10 நிமிடங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி, மின்துாக்கியில் சிக்கியிருந்த வீராங்கனையர் 10 பேரை, பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.