/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.1.35 கோடியில் புதிய கட்டடம்
/
3 துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.1.35 கோடியில் புதிய கட்டடம்
3 துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.1.35 கோடியில் புதிய கட்டடம்
3 துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.1.35 கோடியில் புதிய கட்டடம்
ADDED : ஜூலை 13, 2025 10:26 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் 3 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர், அகரம்துாளி, காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு துணை சுகா தார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு, கர்ப்பிணியர் பரிசோதனை, சிறிய அளவிலான காயங்களுக்கு சிகிச்சை, கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் செயல்படும் துணை சுகாதார நிலைய கட்டடங்கள், 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
தற்போது, கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. மழை நேரங்களில் கூரைகளில் மழைநீர் வழிந்து, பதிவேடுகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாழாகி வருகின்றன.
எனவே, பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2025 -- 26ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், மூன்று துணை சுகாதார நிலையங்கள் கட்ட தலா, 45 லட்சம் ரூபாய் வீதம் என, 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர், அகரம்துாளி, காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு துணை சுகாதார நிலைய கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன.
எனவே, 1.35 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, விரைவில் முறையாக டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது' என்றார்.