/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ் சேவை
/
கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ் சேவை
ADDED : அக் 23, 2024 06:41 PM
உத்திரமேரூர்:அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம், உத்திரமேரூர் பணிமனை சார்பில், உத்திரமேரூரில் இருந்து, கிளாம்பாக்கம் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு தடம் எண்504 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து பழைய பேருந்து என்பதால், அப்பேருந்துக்கு மாற்றாக, உத்திரமேரூர் பணிமனைக்கு அரசு போக்குவரத்து சார்பில் புதியதாக ஒரு பேருந்து வழங்கப்பட்டது.
புதிதாக வழங்கிய அப்பேருந்து சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.