/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழைய ரயில் நிலையம் அருகில் புதிய மின் கம்பம் அமைப்பு
/
பழைய ரயில் நிலையம் அருகில் புதிய மின் கம்பம் அமைப்பு
பழைய ரயில் நிலையம் அருகில் புதிய மின் கம்பம் அமைப்பு
பழைய ரயில் நிலையம் அருகில் புதிய மின் கம்பம் அமைப்பு
ADDED : டிச 31, 2025 05:29 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, அசோக் நகர் பிரிவு, வையாவூர் மின்வாரியத்தினர், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில், சேதமடைந்த நிலையில் இருந்த பழைய மின் கம்பத்தை அகற்றி, புதிய கம்பம் அமைத்தனர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில், ரயில்வே கடவுப்பாதை அருகில் உள்ள, ஒரு மின் கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தன.
இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் சாலையோரம் சேதமான நிலையில் உள்ள மின் கம்பத்தின் மீது லேசாக உரசினாலோ, பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ மின் கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அசோக் நகர் பிரிவு, வையாவூர் மின்வாரியத்தினர், சேதமடைந்த நிலையில் இருந்த பழைய மின் கம்பத்தை அகற்றி நேற்று புதிய மின்கம்பம் அமைத்தனர்.

