/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : டிச 31, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.
சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சாமந்தி, வெற்றிலை, ரோஜா உள்ளிட்ட மாலைகள் அணிந்து, ரத்தினங்கி சேவையில் காட்சியளித்தார்.

