/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்: கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
/
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்: கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்: கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
ஏகாம்பரநாதருக்கு புதிய தங்க தேர்: கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
ADDED : டிச 08, 2025 06:11 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை மூலம், புதிதாக செய்யப்பட்ட தங்க தேரை, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர வி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், அறக்க்ட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் ஏ காம்பர நாதர் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், புதிதாக தங்க தேர் செய்யப்பட்டது.
தங்க தேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தங் க தேரை ஒப்படைத்தனர் .
இந்நி கழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியம், உட்பட பலர் பங்கேற்றனர்.

