/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கற்றல் திறனை ஊக்குவிக்க செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்: சைதை துரைசாமி
/
கற்றல் திறனை ஊக்குவிக்க செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்: சைதை துரைசாமி
கற்றல் திறனை ஊக்குவிக்க செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்: சைதை துரைசாமி
கற்றல் திறனை ஊக்குவிக்க செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்: சைதை துரைசாமி
ADDED : ஜூலை 09, 2025 01:29 AM

காஞ்சிபுரம்,:'கற்றல் திறனை ஊக்குவிக்க, தினசரி வரும் நாளிதழ்களை மாணவ - மாணவியர் படிக்க வேண்டும்' என, சென்னை மனிதநேய ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி காஞ்சிபுரத்தில் பேசினார்.
அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் களியனுார் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், 'நமக்கு நாமே' திட்டத்தில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கு, 25 லட்ச ரூபாய்க்குரிய வங்கி காசோலை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, முத்தியால்பேட்டை முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். தற்போதைய முத்தியால்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் பிரேமா ரஞ்சித்குமார், களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
களியனுார் கிராமத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கு, 'நமக்கு நாமே' திட்டத்தில், 25 லட்ச ரூபாய்க்குரிய காசோலையை, களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசியிடம், சைதை துரைசாமி, ரஞ்சித்குமார், பிரேமா ஆகிய மூவரும் வழங்கினர்.
இதையடுத்து, முத்தியால்பேட்டை, களியனுார், ஏரிவாய், படப்பம், வள்ளுவப்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்களை மூவரும் வழங்கினர்.
சென்னை மனிதநேய ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
பொது வாழ்க்கையானாலும், தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சேவை செய்யும் மனப்பான்மையை நம்மிடையே வளர்த்து கொள்ள வேண்டும்.
மாணவ - மாணவியர் தினசரி செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அதில் இருந்து வினா - விடைகளை ஆசிரியர்கள் தேர்வு செய்து, மாணவ - மாணவியரின் கற்றல் திறனை ஊக்குவிக்க வேண்டும். இது, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொது அறிவு வளர்க்க உறுதுணையாக இருக்கும்.
இதுதவிர, அரசு பள்ளி பாட திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 'ஆயுஸ்' குறித்து அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பாட திட்டமாக கொண்டு வர வேண்டும். உடல் நலன் ஆரோக்கியமாக இருந்தால், அனைத்தையும் சாதித்து விடலாம்.
மேலும், அரசு பள்ளிகளில், 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகிக்கும் மாணவ - மாணவியருக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்க வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், முத்தியால்பேட்டை ஊராட்சி தலைவர் அன்பழகன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

