/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழக்கேதும் இல்லைஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி., கல்லுாரி விளக்கம்
/
வழக்கேதும் இல்லைஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி., கல்லுாரி விளக்கம்
வழக்கேதும் இல்லைஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி., கல்லுாரி விளக்கம்
வழக்கேதும் இல்லைஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி., கல்லுாரி விளக்கம்
ADDED : நவ 20, 2025 04:20 AM
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த கல்லுாரியின் பெயருக்கு பதிலாக, எங்கள் கல்லுாரி பெயர் இடம் பெற்றுள்ளதாக, காஞ்சிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சி புரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி வெளியிட்ட அறிக்கை:
பொறியியல் கல்லுாரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, திருவள்ளூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக, செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால், திருவள்ளூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி என்பதற்கு பதிலாக, எங்களின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. எங்கள் கல்லுாரி மீது வழக்கு ஏதும் பதிவாகவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.