/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமரா இல்லை பாதுகாப்பை உறுதி செய்ய பயணியர் கோரிக்கை

ADDED : ஜூன் 03, 2025 07:30 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரநாதர் கோவில் அருகே, புதிய ரயில் நிலையமும், ரயில்வே ரோடு முனையில் பழைய ரயில் நிலையமும் இயங்கி வருகிறது.
இந்த இரு ரயில் நிலையங்களிலும், அன்றாடம் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் வந்து செல்கின்றனர். ரயில் பயணத்தை நம்பி பல ஆயிரம் பெண்கள், ஆண்கள் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், பல மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களுக்கு வருகின்றனர்.
புதிய ரயில் நிலையத்தில், கழிப்பறை பூட்டி அதன் சாவியை அலுவலகத்தில் வைத்திருகின்றனர். கழிப்பறை பயன்படுத்த விரும்பும் பயணியர், கழிப்பறை சாவியை அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்து கழிப்பறையை திறந்து பயன்படுத்த வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இரு ரயில் நிலையங்களிலுமே, 'சிசிடிவி' கேமராக்கள் இல்லாதது, பயணியருக்கு பாதுகாப்பு வசதியை உறுதிபடுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
பொது இடங்களில் செயின்பறிப்பு, பாலியல் தொல்லை, அடிதடி, விபத்து போன்ற சம்பவங்கள் நடக்கும் சூழலில், காஞ்சிபுரத்தின் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கூட இல்லாதது, பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ரயில்வே நிர்வாகம், கண்காணிப்பு கேமராக்களை நிறுவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.