/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக கட்டியும் பயனில்லை 4 மாதமாக திறக்காத ரேஷன் கடை
/
புதிதாக கட்டியும் பயனில்லை 4 மாதமாக திறக்காத ரேஷன் கடை
புதிதாக கட்டியும் பயனில்லை 4 மாதமாக திறக்காத ரேஷன் கடை
புதிதாக கட்டியும் பயனில்லை 4 மாதமாக திறக்காத ரேஷன் கடை
ADDED : பிப் 02, 2025 12:28 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 11வது வார்டு, ஆதிகேசவ பெருமாள் நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ரேஷன் கடை இல்லாததால், பகுதிவாசிகள் அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க, 4 கி.மீ., துாரம், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதனால், வயதானோர், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். எனவே, ஆதிகேசவ பெருமாள் நகரில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2023 - 24ம் நிதியாண்டில், 19.05 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆதிகேசவ பெருமாள் நகரில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இந்த நிலையில், கட்டுமான பணிகள் நிறைவடைந்து நான்கு மாதங்களான நிலையில், பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் பாழாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், புதிய ரேஷன் கடை கட்டடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.