/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நோபல் உலக சாதனை நிகழ்ச்சி 110 சிலம்ப வீரர்கள் பங்கேற்பு
/
நோபல் உலக சாதனை நிகழ்ச்சி 110 சிலம்ப வீரர்கள் பங்கேற்பு
நோபல் உலக சாதனை நிகழ்ச்சி 110 சிலம்ப வீரர்கள் பங்கேற்பு
நோபல் உலக சாதனை நிகழ்ச்சி 110 சிலம்ப வீரர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 17, 2025 01:49 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் சார்பில், சிலம்பம் நோபல் உலக சாதனைக்காக, மூன்று வயது முதல், 60 வயது வரை, புதிய முறையில் நமது பாரம்பரியமிக்க மண்பானை மீது நின்று 3 மணி நேரம் சிலம்பம் ஆடும் நிகழ்ச்சி, ஆற்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், 110 சிலம்ப வீரர்கள் மண்பானை மீது நின்று, தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றினர். இதன் வாயிலாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளனர். நிர்வாகிகள் வினோத் அன்பரசி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று நிகழ்ச்சியை கண்காணித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று உலக சாதனை நிகழ்த்திய காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மைய மாணவர்களுக்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், இந்தியன் சிலம்பம் பெடரேசன் தலைவர் வலசை முத்துராமன்ஜி, காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்ட செயலர் லட்சுமணன் முன்னிலையில், காஞ்சி சிலம்பம் பயிற்சி மைய பயிற்சியாளர் பாண்டியராஜனிடம் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழை, நிர்வாக அதிகாரி வினோத் வழங்கினார்.