/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சங்கரா பல்கலையுடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம்
/
காஞ்சி சங்கரா பல்கலையுடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம்
காஞ்சி சங்கரா பல்கலையுடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம்
காஞ்சி சங்கரா பல்கலையுடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம்
ADDED : டிச 13, 2025 05:45 AM
காஞ்சிபுரம்: மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையுடன், நோக்கியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், சென்னை நோக்கியா தொழிற்சாலை தலைவர் ஸ்ரீனிவாஸ், தென் இந்திய பகுதியின் தலைவர் கல்யாணசுந்தரம் செயல்பாட்டு மேம்பாட்டுத் தலைவர் பரமேஸ்வரன், புத்தாக்கத் திட்ட மேலாளர் அக்னி, பணியமர்த்தல் மேலாளர் திருக்குமரன், சங்கரா பல்கலை துணைவேந்தர் முனைவர் சீனிவாசு, பதிவாளர் முனைவர் ஸ்ரீராம், முனைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன், தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சிக் கூட்டு மற்றும் தொழில்துறை- கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான பரிமாற்றம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களுக்கு செயல்முறைப் பயிற்சி, தொழிற்கல்விக்கா ன திட்டங்கள் மற்றும் வே லை வாய்ப்புகள் கிடைக்கும் என, சங்கரா பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

