/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகனாபுரத்தில் நிலம் எடுக்க அறிவிப்பு
/
ஏகனாபுரத்தில் நிலம் எடுக்க அறிவிப்பு
ADDED : அக் 01, 2024 06:42 AM
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
அதில் தனியார் வசம் உள்ள, 3,750 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது. மீதி அரசு நிலம்.
தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தி வருகிறது.
தற்போது, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள ஏகனாபுரத்தில், 58 ஏக்கர் நிலம் எடுக்கும் பணிக்கு, அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த கிராம மக்கள், பரந்துார் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, இரு ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றனர். ஏகனாபுரத்தில், 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.