/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மண் வள அட்டை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
/
காஞ்சியில் மண் வள அட்டை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
காஞ்சியில் மண் வள அட்டை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
காஞ்சியில் மண் வள அட்டை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜன 11, 2025 07:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.
பெரும்பாலான விவசாயிகளின் விளைநிலங்களில், அளவுக்கு அதிகமாக உரம் போட்டு, மண்ணின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என, வேளாண் அலுவலர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, சாகுபடி செய்யப்படும் நிலத்தில் காரம், அமிலம், உப்புத்தன்மை மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் ஆகிய உரங்கள் போட வேண்டும் என, விளக்கும் தகவல்கள் அடங்கிய மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இது, சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஏற்ப, உரங்களை போட்டு பயிர் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நிதியாண்டுகளில், மண்வள அட்டை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 1,366 நபர்களுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. அடுத்த 2023 - 24ம் நிதியாண்டில், 5,431 பேருக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது. நடப்பு 2024 - 25ம் நிதியாண்டில், 7,100 பேருக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:
மண் வள அட்டையில் பரிந்துரை செய்த உரங்களை போட்டு, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். அப்போது தான் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். தற்போது, விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், மண் வள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

