/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு அதியமான் நகரில் நாய் தொல்லை அதிகரிப்பு
/
செவிலிமேடு அதியமான் நகரில் நாய் தொல்லை அதிகரிப்பு
ADDED : பிப் 11, 2025 12:31 AM

செவிலிமேடு, காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு 49வது வார்டில் உள்ள அதியமான் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
காஞ்சிபுரம் கலெக்ட்ரேட், ஜெம் நகர், ஓரிக்கை, காமாட்சியம்மன் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு, இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
சாலையை மறித்து நிற்கும் நாய்களால், இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ - -மாணவியர், பெண்கள், முதியோர், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் புதிதாக வரும் நபர்களை, நாய்கள் குரைத்தபடியே விரட்டி செல்வதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், இப்பகுதியில் வசிப்போரும் தெருவில் அச்சத்துடன் நடமாட வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, அதியமான் நகர் வாசிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

