/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்
/
கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்
கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்
கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்
ADDED : அக் 16, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாடு ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வயலுார் முகத்துவாரத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைகட்டு கால்வாய் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கம்பன் கால்வாயில், பாலாற்று நீர் சென்று, பல ஏரிகள் நிரம்புகின்றன.
இதில், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர், மேல் வேண்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, மக்ளின் கால்வாய் கோவிந்தவாடி அகரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
இந்த கால்வாய், முறையாக பராமரிப்பு இல்லாதால், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் காணப்படுகின்றன. வட கிழக்கு பருவ மழை துவங்குவற்கு முன், சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சிக்கல் இன்றி தண்ணீர் செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என, கோவிந்தவாடி அகரம் விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.