/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகன் கோவில் திருப்பணிக்கு ஆட்சேபனை 10 அடி நகர்த்தி கட்ட அறநிலையத்துறை திட்டம்
/
முருகன் கோவில் திருப்பணிக்கு ஆட்சேபனை 10 அடி நகர்த்தி கட்ட அறநிலையத்துறை திட்டம்
முருகன் கோவில் திருப்பணிக்கு ஆட்சேபனை 10 அடி நகர்த்தி கட்ட அறநிலையத்துறை திட்டம்
முருகன் கோவில் திருப்பணிக்கு ஆட்சேபனை 10 அடி நகர்த்தி கட்ட அறநிலையத்துறை திட்டம்
ADDED : நவ 04, 2025 10:20 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலை, 10 அடி நகர்த்தி கட்டுவதற்கு, அப்பகுதியில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் தெருவில் உள்ள முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து சிரமம் ஏற்படுவதால், புதிதாக அப்பகுதியில் முருகன் கோவில் கட்ட, சில மாதங்கள் முன்பாக, அறநிலையத்துறை பாலாலயம் நடத்தியது.
ஆனால், அடுத்தகட்ட பணிகள் துவங்கவில்லை என, பக்தர்கள் தெரிவித்து வந்தனர்.
கோவிலை இடித்து அங்குள்ள வீட்டருகே கட்ட திட்டமிடுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சண்முகவேல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே, திருப்பணி துவங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சண்முகவேல் என்பவர் கூறியதாவது:
கோவிலை இடித்துவிட்டு, கிழக்குப்புறமாக 10 அடி நகர்த்தி கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை முயற்சிக்கிறது.
அங்குள்ள வீட்டருகே கோவிலை நகர்த்தி கட்டுவதை ஆட்சேபனை செய்து, நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் .அங்குள்ள சிலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிமன்ற வழக்கு காரணமாக பணி தாமதம் ஏற்படவில்லை. கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு மதிப்பீடு உத்தரவு வர வேண்டியுள்ளது.
கோவில் கட்ட 87 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்துள்ளோம். நீதிமன்ற வழக்குக்கு, இணை கமிஷனர் அலுவலகதத்திலிருந்து நீதிமன்றத்திற்கு பதில் தெரிவிக்கப்படும்.
விரைவில் பணிகள் துவங்கும்.
இவ்வாறு கூறினார்.

