/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்
/
காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்
ADDED : நவ 04, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: ஆந்திராவில், வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது பேரின் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நெரிசலில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் கோவிலில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

