/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடையூறான மின்கம்பம்: மணியாட்சியில் அகற்றம்
/
இடையூறான மின்கம்பம்: மணியாட்சியில் அகற்றம்
ADDED : டிச 22, 2025 05:15 AM

காஞ்சிபுரம்:வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அகற்றி வேறு இடத்தில் நட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில், மணியாட்சி கிராமத்தில் இருந்து, சாமந்திபுரம் கிராமம் மற்றும் மணியாட்சி ஏரிக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, மின் கம்பம் இடையூறாக உள்ளது.
இந்த சாலை வழியாக, டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகள் செல்ல முடியவில்லை. குறிப்பாக, ஏரிக்கரை ஓரம் விவசாய நிலங்களில் இருந்து நெல், காய்கறி உள்ளிட்ட விளைப்பொருட்கள் மற் றும் டிராக்டரில் உர மூட்டைகள் எடுத்து செல்லும் போது, வீடுகளின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.
இந்நிலையில், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, மின் வாரிய அதிகாரிகள் மதிப்பீடு தயாரித்து, புதிய மின் கம்பத்தை கான்கிரீட் சாலையோரம் வாரிய அதிகாரிகள் நட்டுள்ளனர்.
இதன் மூலமாக, டிராக்டர் மற்றும் நான்குசக்கர வாகனங்கள் செல்ல எளிதாக உள்ளது என, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

