/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலை சேதம்: ஆரம்பாக்கத்தில் விபத்து அபாயம்
/
மண் அரிப்பால் சாலை சேதம்: ஆரம்பாக்கத்தில் விபத்து அபாயம்
மண் அரிப்பால் சாலை சேதம்: ஆரம்பாக்கத்தில் விபத்து அபாயம்
மண் அரிப்பால் சாலை சேதம்: ஆரம்பாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : டிச 22, 2025 05:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அருகே, ஆரம்பாக்கம் செல்லும் சாலை மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடைந்து படுமோசமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் சென்று வருகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து, ஆரம்பாக்கம் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
நாவலுார், காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக, படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், சமீபத்தில் பெய்த மழையில், சாலையோரம் மண் அரிப்ப ஏற்பட்டு, பெருமளவில் சேதமடைந்து உள்ளது.
இதனால், இவ்வாழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மண் அரிப்பால் சேதமான ஆரம்பாக்கம் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

