/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அதிகாரிகள் பாராமுகம்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அதிகாரிகள் பாராமுகம்
ADDED : பிப் 04, 2025 12:44 AM

காலுார், காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இருந்து காலுார் ஊராட்சி, பெரிய நத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், விவசாய நிலத்தையொட்டி, சாலையோரம் உள்ள மூன்று மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. நாளுக்கு நாள் இந்த மின்கம்பங்கள் சாய்ந்து வருவதால், எப்போது சாய்ந்து விழுமோ என, வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காலுார் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.