ADDED : நவ 15, 2024 08:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருங்கோழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன், 80. இவர், சில நாட்களாக ஞாபக மறதி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் அப்பகுதி ஏரிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின், ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.