/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
/
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
ADDED : செப் 30, 2025 11:50 PM

வாலாஜாபாத்:ஆண்டிற்கு, ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழாவை, நத்தாநல்லுார் கிராமத்தில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் சேவை அமைப்புகள் இணைந்து ஆண்டிற்கு, ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, நான்கு ஆண்டுகளில் ஆற்றங்கரை, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும், அரசு பொது இடங்களிலும் 4 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, 5ம் ஆண்டுக்கான துவக்க விழா வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கீழாண்டை தாங்கல் பகுதியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, விதைகள் தன்னார்வ அமைப்பாளர் பசுமை சரண் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்று பனை விதை நடவினை துவக்கி வைத்தனர்.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், அப்பகுதி ஊராட்சி தலைவர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று, முதற்கட்டமாக 5,000 பனை விதைகள் நடப்பட்டன.