/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்து கிடக்கும் மின் பெட்டி சின்னகாஞ்சியில் ஆபத்து
/
திறந்து கிடக்கும் மின் பெட்டி சின்னகாஞ்சியில் ஆபத்து
திறந்து கிடக்கும் மின் பெட்டி சின்னகாஞ்சியில் ஆபத்து
திறந்து கிடக்கும் மின் பெட்டி சின்னகாஞ்சியில் ஆபத்து
ADDED : டிச 16, 2024 02:32 AM

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகளை பராமரிப்பதற்காக, எஸ்.பி.ஐ., வங்கி எதிரில் மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மின் மீட்டர், பியூஸ் கேரியர், மின் ஒயர்கள் உள்ள நிலையில், அது பாதுகாப்பாக மூடப்படாமல் திறந்து கிடக்கிறது.
சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில், மின் ஒயர்கள் தொங்கிய நிலையில் மின்பெட்டி திறந்து கிடப்பதால், இவ்வழியாக செல்லும் சிறுவர்கள், விளையாட்டுத்தனமாக மின் ஒயர்களை பிடித்து இழுத்தாலோ, இவ்வழியாக மேய்ச்சலுக்காக உலாவும் மாடுகள் மின்பெட்டியில் உரசினாலோ மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, டி.கே.நம்பி தெருவில், சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் உயரத்தில், திறந்து கிடக்கும் மின் பெட்டியை பாதுகாப்பாக மூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.