/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
/
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
ADDED : நவ 26, 2024 11:48 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர், சன்னிதி தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வீடு, நிலம், மனை ஆகியவை வாங்க, விற்க மற்றும் பத்திரப்பதிவு செய்து வந்தனர்.
சார் - பதிவாளர் அலுவலக கட்டடம், சேதமடைந்து இருந்ததால், இங்கு வரும் மக்கள் அச்சத்துடனே வந்து சென்றனர். எனவே, சேதமடைந்த பழைய கட்டடத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், 1.88 கோடி ரூபாய் செலவில், உத்திரமேரூரில் புதிய சார் - பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. அதை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,- சுந்தர், மாவட்ட பதிவாளர் முரளி, சார் பதிவாளர் நவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.