/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு
/
பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு
ADDED : அக் 19, 2024 01:56 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், குடிசை வீடுகளில் வசித்து வந்த 20 இருளர் குடும்பத்தினருக்கு சமீபத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அப்பகுதி வாசிகளுக்கு பிரதம மந்திரி ஜன்மன் திட்டம் மற்றும் பழங்குடியின நல வாரியம் சார்பில், இலவச வீடுகள் கட்டித்தர தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஒரு வீட்டிற்கு 5.7 லட்சம் ரூபாய் வீதம், 20 குடும்பத்தினருக்கு 1 கோடியே 1 லட்சத்து 40,000 ரூபாய் செலவில், புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பழங்குடியினர் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார். உத்திரமேரூர் பி.டி.ஓ., லோகநாதன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், து.தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தங்களது வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சுயத்தொழில் வசதி ஏற்படுத்தி உதவுமாறு எம்.எல்.ஏ., சுந்தரிடம், பழவேரி பழங்குடியினர் மக்கள் கோரினர்.

