/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மகளிர் உற்பத்தி பொருட்களை வரும் 30ல் சந்தைபடுத்த வாய்ப்பு: கலெக்டர்
/
மகளிர் உற்பத்தி பொருட்களை வரும் 30ல் சந்தைபடுத்த வாய்ப்பு: கலெக்டர்
மகளிர் உற்பத்தி பொருட்களை வரும் 30ல் சந்தைபடுத்த வாய்ப்பு: கலெக்டர்
மகளிர் உற்பத்தி பொருட்களை வரும் 30ல் சந்தைபடுத்த வாய்ப்பு: கலெக்டர்
ADDED : மே 23, 2025 02:07 AM
காஞ்சிபுரம்:மகளிர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைபடுத்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திகுறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் அபார்ட்மெண்ட் பஜார்கள், கார்பரேட் பஜார்கள், கல்லுாரி சந்தைகள், விருப்ப கண்காட்சி மற்றும் கட்டாய கண்காட்சி, இயற்கை சந்தைகள் மற்றும் வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பு போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள ஹிரா நந்தினி பார்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், மே 30ம் தேதி முதல், ஜூன் 1ம் தேதி வரை 3 நாட்கள் அபார்ட்மெண்ட் பஜார் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள், துாய தேன், மரச்செக்கு எண்ணெய் வகைகள், வீட்டு அலங்கார மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.