/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்த பண்பாட்டு மையம் கீழ்கதிர்பூரில் அமைக்க எதிர்ப்பு
/
புத்த பண்பாட்டு மையம் கீழ்கதிர்பூரில் அமைக்க எதிர்ப்பு
புத்த பண்பாட்டு மையம் கீழ்கதிர்பூரில் அமைக்க எதிர்ப்பு
புத்த பண்பாட்டு மையம் கீழ்கதிர்பூரில் அமைக்க எதிர்ப்பு
ADDED : ஆக 25, 2025 12:21 AM
கீழ்கதிர்பூர்:கீழ்கதிர்பூரில், புத்த பண்பாட்டு மையம் அமைக்க நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் நலச்சங்கத்தினர் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மனு விபரம்: காஞ்சிபுரம் வட்டம், கீழ்கதிர்பூர் கிராமத்தில் செட்டில்மென்ட் நிலங்கள் அனாதீனம் என தவறான வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்க சட்டபேரவை மதிப்பீட்டு குழுவின் பரிந்துரையின்படி, 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்க, தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் ஆகியோரால் விசாரணை செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கோப்புகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம், நில நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் எங்கள் கிராம விவசாயிகளின் விளைநிலங்களில் புத்த பண்பாட்டு மையம் ஆய்வு நடைபெறும் என, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ளோம். இதனால், எங்களது வாழ்வாதாரத்தை இழந்து விடும் சூழல் உள்ளது.
எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், புத்த பண்பாட்டு மையம் அமைக்கவோ, வேறு எந்த பயன்பாட்டிற்காகவோ, எங்கள் நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என, எதிர்ப்பினை, இம்மனு மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.