/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
/
மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
ADDED : டிச 17, 2024 12:51 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியை சுற்றியுள்ள ஏனாத்துார், சிறுகாவேரிப்பாக்கம், புத்தேரி, கருப்படித்தட்டடை உள்ளிட்ட 11 ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்தது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வராத நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சுற்றியுள்ள 11 ஊராட்சியின் தலைவர்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை, விவசாயிகள் சங்கம் எதிர்க்கிறது.
மேலும், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் கிராம மக்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் எனவும், வரி உயர்வு காரணமாக கிராம மக்கள் பாதிக்கப்படுவர் உள்ளிட்ட காரணங்களை இச்சங்கம் முன்வைக்கிறது.
இந்நிலையில், 11 ஊராட்சிகளையும், மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் லாரன்ஸ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராமப்புறங்களில் வசிக்கும் 500க்கும் மேற்பட்டோர், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் ஏற்படும் பாதிப்புகளை, சங்க நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.