/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு செலவில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகம் பயன்படுத்த எதிர்ப்பு
/
அரசு செலவில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகம் பயன்படுத்த எதிர்ப்பு
அரசு செலவில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகம் பயன்படுத்த எதிர்ப்பு
அரசு செலவில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகம் பயன்படுத்த எதிர்ப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:32 AM

படப்பை:படப்பையில், அரசு நிதியில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகத்தினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட 7 ஏக்கர் நிலத்தில், கால்நடை மருந்தகம், பொதுப்பணித்துறை அலுவலகம், மணிமங்கலம் - படப்பை துவக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இவற்றிற்கு பொதுவான வழி, அரசு பள்ளியின் நுழைவாயிலாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரலில், வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, 31 சென்ட் நிலம் உட்பிரிவு செய்து, வருவாய் துறை பட்டா வழங்கியது.
இதையடுத்து, வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பாதை அமைக்க, பள்ளியின் சுற்றுச்சுவர் அனுமதியின்றி இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின், அரசு நிதியில் அவசரம் அவசரமாக, 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அரசு நிதியில் அமைக்கப்பட்ட இந்த சாலையை, அருகில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இயங்கும் உணவக வாகனங்கள் லோடு ஏற்றி செல்லும் பாதையாக, தினமும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பிரபல அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான வணிக வளாகம் என்பதால், அவர்கள் பயன்படுத்தவே, பல்வேறு எதிர்ப்புகளை மீறி, அரசு நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை வணிக வளாகத்தினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்றனர்.