ADDED : மார் 07, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பென்னலுார், குண்ணவாக்கம், பழவேரி, காவிதண்டலம், பாலேஸ்வரம், சின்னாளம்பாடி, ரெட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 32 இருளர்களுக்கு, மனைபட்டா வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது, 32 இருளர்களுக்கு வீடு கட்ட தலா, 5.07 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி அணை வழங்கும் நிகழ்ச்சி உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் வசந்தி ஆகியோர் பங்கேற்று பணி ஆணையை வழங்கினர்.

