/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெரும்பாக்கம் சாலை பணி விரைந்து முடிக்க உத்தரவு
/
பெரும்பாக்கம் சாலை பணி விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜன 04, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ், 7 மீட்டர் அகலத்திற்கு, 9.6 கி.மீ., நீளத்திற்கு மறுசீரமைப்பு பணியாக நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளிதரன், சாலை பணியை திடீர் ஆய்வு செய்தார். இதில், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் விஜய், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

