/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலை சீரமைக்க ஓரிக்கையினர் வலியுறுத்தல்
/
சேதமான சாலை சீரமைக்க ஓரிக்கையினர் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை தந்தை பெரியார் நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, ‛மேன்ஹோல் சிமென்ட் தொட்டி' அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளம் தோண்டப்பட்டதால், சேதமான சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால், காஞ்சிபுரத்தில், சில தினங்களாக பெய்த மழைக்கு, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தேங்கிய மழைநீரால் சாலை சகதியாக மாறியுள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பாதாள சாக்கடை பணியால், சேதமான சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.