/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புறக்காவல் நிலையம் கீழ்கதிர்பூரில் துவக்கம்
/
புறக்காவல் நிலையம் கீழ்கதிர்பூரில் துவக்கம்
ADDED : நவ 12, 2025 10:50 PM

காஞ்சிபுரம்: கீழ்கதிர்பூரில், புறக்காவல் நிலையத்தை, காஞ்சிபுரம் எஸ்.பி., நேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பாலுச்செட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புறக்காவல் நிலையத்தை துவக்கி வைத்தார்.
கீழ்கதிர்பூர் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.

