/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கல்லுாரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்வு
/
காஞ்சிபுரம் கல்லுாரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்வு
காஞ்சிபுரம் கல்லுாரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்வு
காஞ்சிபுரம் கல்லுாரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்வு
ADDED : நவ 12, 2025 10:51 PM

காஞ்சிபுரம்: -: -: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், மாணவ - மாணவியருக்கான 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் மாணவ- - மாணவியருக்கான “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று துவக்கி வைத்து பேசினார்.
கல்லுாரி வளாகத்தில், மாணவ - -மாணவியர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தையும் அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கவிஞர் யுகபாரதி, “மனத்துக்கண் மாசிலன்” என்ற தலைப்பில் மாணவியரிடம் உரையாற்றினார்.
மாணவ - மாணவியருக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், கல்லுாரி முதல்வர் கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

