/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'வேர்களை தேடி' திட்டத்தில் சுற்றுப்பயணம் பட்டு பூங்காவில் வெளிநாட்டு தமிழர்கள்

ADDED : ஆக 14, 2025 11:28 PM

காஞ்சிபுரம்:'வேர்களை தேடி' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், காஞ்சிபுரம் அருகே செயல்படும் பட்டு பூங்காவை நேற்று பார்வையிட்டு, செயல்பாடுகளை தெரிந்து கொண்டனர்.
இத்திட்டம் வாயிலாக, வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், தொழில் போன்றவற்றை பார்வையிட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மியான்மர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த, 20 ஆண்கள், 75 பெண்கள், மொத்தம் 95 பேர், தமிழகத்தில் ஆக.,1 முதல் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
கடலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயணம் செய்த பின், காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் செயல்படும் பட்டு பூங்காவை அவர்கள் நேற்று பார்வையிட்டனர். கைத்தறி துறை அதிகாரிகளுடன் பட்டு பூங்காவில் கலந்துரையாடினர்.
பட்டு பூங்காவின் செயல்பாடுகள், பட்டு சேலையின் சிறப்பம்சம், நெசவாளர்கள் வாழ்வியல் போன்றவை பற்றி அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, கைத்தறி துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.