/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி பழனி முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
/
காஞ்சி பழனி முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
காஞ்சி பழனி முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
காஞ்சி பழனி முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED : அக் 26, 2025 11:13 PM

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பழனி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, 108 பால்குட ஊர்வலம் கோலாகலமாக நேற்று நடந்தது.
பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழனி முருகன் கோவிலிலில், 16ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கடந்த 21ம் தேதி, விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது.
இதில், ஆறாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு, மூலவர் பழனி முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, முருக பக்தர் நரேஷ் என்பவர், தன் உடலில், 108 வேல் தரித்து முன்னே சென்றார்.
பெண்கள் 108 பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழனி முருகன் கோவில் சென்றனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை முருகன் வீதியுலாவும், சிங்கமுகாசூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.
ஏழாம் நாள் விழாவான இன்று, காலை 8:00 மணிக்கு அரசு காத்த அம்மனிடம் இருந்து, சக்திவேல் பெறுதல், இரவு 8:00 மணிக்கு வீரவாகு துாது மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
நாளை, மாலை 6:00 மணிக்கு முருகன், தெய்வானை திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.

